இவர்கள் இப்படித்தான்!!

Mahalingam M
3 min readApr 6, 2021

இங்கே இருக்கிறவர்கள் ஆங்கிலம் சரியாக பேச மாட்டார்கள், மிகவும் தன்னம்பிக்கை குறைவானவர்களாக இருப்பார்கள் என்று திரைப்படங்களில் Cringe செய்து பார்த்திருக்கிறேன்.

ஆனால் ஒரு வாரம் முன்பு நான் கலந்து கொண்ட ஒரு கலந்துரையாடலில் “நம்ம கல்லூரி மாணவர்கள் என்னவெல்லாம் Improve செய்ய வேண்டும்” என்ற கேள்விக்கு கலந்துரையாடலில் கலந்து கொண்டோர் பதில் கூறினார்கள். சிலர் நல்ல ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்து வைத்தார்கள். ஆனால் அதில் இரண்டு பேர் பேசிய கருத்துக்கள் எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்துகின்றவையாக இருந்தது. அதைப் பற்றி சிறிது நேரம் யோசித்து கொண்டிருந்தேன். நண்பர்கள் சில பேரிடம் அதைப்பற்றி பேசினேன். அவர்களுக்கு அந்த எண்ணம் வருவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஒரே சிந்தனை. அந்த சிந்தனையின் வெளிப்பாடு தான் இது.

முதல் நபர் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் சொன்ன கருத்து,

"நான் நம்ம பசங்க நிறைய பேர Interview எடுத்திருக்கேன் கடைசி சில வருசமா. அவங்க எல்லாரும் நல்ல Intelligent-அ இருக்காங்க. ஆனா எல்லாருமே language-ல weak-அ இருக்காங்க. ரொம்ப low confident-அ இருப்பாங்க பேசிறப்போ......"

இது வரை இவர் பேசிய கருத்துக்கு எனக்கு எந்த முரணும் இல்லை. இது இங்கே இருக்கின்ற பிரச்சினை தான். ஆனால் இதற்கு பிறகு அவர் பேசிய கருத்து நாம் எப்படி Conditioning செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை புரிய வைத்தது. அவர் சொன்ன கருத்து,

"....ஆனா எல்லாருமே language-ல weak-அ இருக்காங்க. ரொம்ப low confident-அ இருப்பாங்க பேசிறப்போ. இதுக்கு காரணம் நம்ம பசங்க down south-ல இருந்து வரனால.."

இதில் முதல் விடயம், Language skills-ம் Communication skills-ம் தனித்தனியானவை. Language skills என்பது மொழித்திறன், Communication skills என்பது நாம் நினைத்ததை effective-ஆக மற்றவர்களிடம் சொல்லும் திறன். ஆங்கிலம் பேசும் திறன் மென்பொருள்/தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பெருநிறுவனங்களில் மேற்கத்திய நாடுகளுடன் அதிகமாக கலந்துரையாடல் இருக்கிற காரணத்தினால் கண்டிப்பாக தேவைப்படுகிற ஒன்று. அதை நான் மறுக்கவே இல்ல. ஆனால் தனது தாய் மொழியில் திறம்பட communicate செய்ய தெரிந்த ஒருவருக்கு இன்னொரு மொழியை கற்றுக்கொண்டு அதில் communicate செய்வது அவளவு கடினமானது இல்லை. ஒரு சிறு உதாரணம்,

என் ஊர் கோவிலில் பூ விற்கின்ற அண்ணன் ஒருவர் ஆங்கிலம் சரளமாக பேசுவார். காரணம், கோவிலுக்கு வருகின்ற ஏராளமான வெளிநாட்டவர்களிடம் தொடர்ந்து பேசிய அனுபவதினால் வந்தது.

அவர் பேசியதில் இரண்டாவது முக்கியமான விடயம், இதுக்கு காரணம், நம்ம Down South-ல இருந்து வருவதால் என்று சொன்னது. இது மிக பெரிய Stereotyping. இந்த இடத்தில் இருந்து வருபவர்கள் இப்படித்தான் இருப்பார்கள், அப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று பொதுமைப்படுத்துவது ஒரு மனிதனுக்கு நடக்கும் மிக பெரிய கொடுமை. இது உலகத்தில் பல இடங்களில் பல விதமாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நபர் சொன்ன கருத்தும் அதில் அடங்கும். ஒரு மொழி பேசத்தெரியாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னை பொறுத்த வரை, அதற்கான Exposure-ம், தேவையும் அதிகமாக அந்த நபருக்கு இல்லை. இது எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம்.

தமிழ் வழி கல்வி கற்றவர்கள் ஏராளமானோர் சரளமாக, தடையின்றி ஆங்கிலம் பேசுவதை நான் பல்வேறு இடங்களில் பார்த்திருக்கிறேன்.

காரணம் - "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்"

இது ஆங்கிலம் தாய் மொழியாக இல்லாத நம்மை போன்ற அனைத்து நாடுகளுக்கும் முழுமையாக பொருந்தும். அது என்ன "Down South" என்று காரணம் சொல்றது. இந்தியாவின் மிக பெரிய ஆளுமைகள் ஏராளமானோர் தமிழகத்தின் சிறு சிறு கிராமங்களில் இருந்து வந்தவர்கள் தான்.

இதை விளக்கும் விதமாக கிரிக்கெட் வீரர் Ashwin ஒரு காணொளியில் ஒரு அற்புதமான கருத்தை தெரிவித்தார். "Conditioning" என்பது எல்லா இடங்களிலும் எல்லா விதங்களிலும் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு உதாரணமாக, ஒரு Pink ball-ஐ camera-வில் காண்பித்து இது நாங்கள் stadium-இல் naked eyes-இல் பார்கிற பொழுது ஒரு விதமான Orange color-இல் இருக்கும். ஆனால் Camera lens-இல் இது Pink ஆக தெரியும். அதனால் இதை Pink ball என்று broadcasters அனைவரும் சொல்லி சொல்லி மக்களுக்கு இது Pink ball என்று மனதில் பதிந்து விட்டது. ஒரு முறை ball sixer போனபொழுது ரசிகர் ஒருவர் அந்த ball-ஐ பிடித்துவிட்டு pink ball என்று கத்தினாராம். அவரிடம்,

"Hey that's not purely pink. It's orange" என்று சொன்ன பொழுது,

"No Man! This is Pink" என்றாராம்.

இதை உதாரணம் காட்டி Ashwin கூறியது, "நம்மள எப்படி Conditioning பண்றாங்களோ அதையே நம்ம நம்புரோம், ஒரு விசியம் இப்படி தான் இருக்கும்னு சொல்லி நம்மள பழக்க படுத்துறாங்க. அதையே நம்ம உண்மைனும் நம்புறோம்".

இது நான் மேலே விவாதிதுள்ள கருத்துக்கும் பொருந்தும். Down South என்றால் ஆங்கிலம் இப்படி தான் இருக்கும். இது நகரங்களில் குறைவாகவே இருக்கும் என்று conditioning செய்ய பட்ட ஒரு கருத்து.

இதையே ஆங்கிலத்தில் "Unconscious bias" என்று கூறுவார்கள். இதை கேட்ட இன்னொருவரும்,

"I echo this. They lack communication and confidence as they are from down south" என்றார்.

இவர்கள் இருவருமே மென்பொருள் நிறுவனங்களில் நெடு காலமாக இருப்பதாக பெருமையாக கூறினர். ஆனால் அவர்களுடைய "so called language skills-இல்" சில குறைகள் இருந்தன. அது என்னை பொறுத்த வரை தவறே இல்லை. நமக்கு ஆங்கிலம் தாய் மொழி இல்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய தொழிலின் ஆரம்ப காலகட்டங்களில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இது போகிற போக்கில் கடந்து செல்லக்கூடிய கருத்து என்று இருந்தாலும், இந்த மனப்பான்மை பல தவறான கருத்துகளுக்கு விதையாக இருக்கிறது. உதாரணம் - இந்த நகரத்தில் இருந்து வருகிறவர் இப்படி தான் உடை அணிவார், இந்த சமூகத்தில் இருந்து வருகிறவர் இப்படித்தான் உணவு உண்பார், இந்த தெருவிலிருந்து வருகிறவர் இந்த சிந்தனைகளை கொண்டவராக இருப்பார் என்று பல கருத்துகளுக்கு இது விதையாக இருக்கும்.

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் வளர்ந்தாலும், குற்ப்பிட்ட பழக்க வழக்கங்களை அவனுக்குள் சிறு வயதில் தினித்தாலும், அவன் வருங்காலத்தில் என்னவாக போகிறான் என்பதை அவனுக்கு முதிர்ச்சி வந்த பிறகு அவனே தீர்மானிக்கின்றான்.

ஆகையால் எவர் ஒருவரையும் Stereotyping/Generalizing, செய்வது நம்மீது Conditioning செய்யப்பட்ட ஒன்று. அதை இத்தனை வயதை கடந்த பிறகும், வேறு வேறு சமூகத்தில் இருந்து வரும் மக்களிடம் பழகும் வாய்ப்பு/Exposure கிடைத்தும் தற்குறி தனமாக இருந்துவிட்டு, நான் அங்கே வேலை செய்கிறேன், இங்கே வேலை செய்கிறேன், இவளவு ஊதியம் வாங்குகிறேன், இவர்களுக்கு உதவி உள்ளேன் என்று கூறி மார் தட்டி கொள்வது கேவலம்.

யாருமே பிறக்கும் பொழுதே ஞானிகளாக பிறப்பதில்லை. நாம் எப்படி அனுபவத்திலிருந்து கற்று கொண்டு, Evolve ஆகி ஒவ்வொரு நாளும் நம்மை ஒரு நல்ல மனிதனாக மேன்மை படுத்தி கொள்கிறோம் என்பதே முக்கியம்!

மாறுவோம், மாற்றுவோம்!

Credit: Getty Images

--

--